இந்தியா

Fengal Cyclone | கொட்டும் கனமழை.. சென்னை விமான நிலையம் மூடல்

Published

on

Fengal Cyclone | கொட்டும் கனமழை.. சென்னை விமான நிலையம் மூடல்

 

Advertisement

வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று (நவம்பர் 30) பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெரும்பாலான நிறுவனங்ககளும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பொதுமக்களும் தங்களது வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஃபெங்கல் புயல் மற்றும் கனமழை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் அதேபோல் சென்னைக்கு வரும் விமானங்கள் அனைத்தையும் இன்று காலை 9:30 மணியிலிருந்து மறு உத்தரவு வரும் வரை, குறிப்பாக மாலை 5 மணி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 

Advertisement

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சீரடைந்த பின்பு மீண்டும் விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட மற்ற விமான நிறுவனங்கள் இதுவரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் பயணிகள் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version