விளையாட்டு

IND vs PAK LIVE Score: அடுத்தடுத்த விக்கெட் இழப்பு… இந்தியா நிதான பேட்டிங்!

Published

on

Loading

IND vs PAK LIVE Score: அடுத்தடுத்த விக்கெட் இழப்பு… இந்தியா நிதான பேட்டிங்!

India U19 vs Pakistan U19 (IND-U19 vs PAK-U19) U19 Asia Cup 2024 Live Cricket Score Updates: 8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Pakistan U19 Asia Cup 2024, LIVE Cricket Scoreஇந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சனிக்கிழமை  பாகிஸ்துடன் மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சாத் பைக் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்த ஷாஜாய்ப் கான், 147 பந்துகளில் 5 பவுடண்டரி, 10 சிக்ஸர்களை பறக்கவிட்டு 159  ரன்கள் குவித்தார். தற்போது ஆண்ட்ரே சித்தார்த் தலைமையிலான இந்திய அணி 282 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறார்கள். இரு அணி  வீரர்கள் பட்டியல் இந்தியா: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன் ), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), நிகில் குமார், கிரண் சோர்மலே, ஹர்திக் ராஜ், முகமது எனான், சமர்த் நாகராஜ், யுதாஜித் குஹாபாகிஸ்தான்: ஷாஜாய்ப் கான், உஸ்மான் கான், சாத் பைக் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஃபர்ஹான் யூசப், ஃபஹாம்-உல்-ஹக், முகமது ரியாசுல்லா, ஹாரூன் அர்ஷத், அப்துல் சுபான், அலி ரசா, உமர் ஜைப், நவீத் அகமது கான். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version