விளையாட்டு

IPL | சர்ச்சை வீரர்கள் சாதிப்பார்களா?… ஐபிஎல் ஏலமும், பிசிசிஐ தடையும்!

Published

on

IPL | சர்ச்சை வீரர்கள் சாதிப்பார்களா?… ஐபிஎல் ஏலமும், பிசிசிஐ தடையும்!

Advertisement

அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் கிரிக்கெட்டில், ஆண்டுக்கு ஆண்டு பல சாதனைகள் அரங்கேறி வருகின்றன. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம், சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகளின் நிர்வாகிகள், ஏலப்பட்டியலில் இருந்த வீரர்களின் சாதனைகள், பலம், பலவீனங்களை பல கட்டங்களாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தனர்.

சில அணிகள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சில வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கின. அப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்த வீரர் தான் மணிஷ் பாண்டே. ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை வைத்துள்ள மணிஷ் பாண்டே பந்துவீச பிசிசிஐ தடை விதித்திருந்தது. அதாவது பந்துவீசும் முறை, விதிகளுக்கு உட்பட்டு இல்லை எனக்கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தடையை கண்டுகொள்ளாமல், 75 லட்சம் ரூபாய்க்கு அவர் கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்வரிசையில் பேட்டிங் செய்வது தான் மணிஷ் பாண்டேவின் பலம் என்றாலும், பகுதி நேர பந்துவீச்சாளராகவும் இருந்து வருகிறார்.

Advertisement

2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 94 ரன்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் மணிஷ் பாண்டே. 22 அரைசதங்கள் விளாசியுள்ள மணிஷ் பாண்டே, கொல்கத்தா அணி மீண்டும் மகுடம் சூட பங்களிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மணிஷ் பாண்டே பந்து வீச தடை செய்யப்பட்டபோது, ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் ஹூடாவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக அவரை கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளது பிசிசிஐ. எந்த வரிசையிலும் பேட் செய்து ரன் குவிக்கும் வல்லமை படைத்த ஹூடாவை, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்காக விளையாடி வந்த இவரை, மத்திய வரிசையில் பேட்டிங் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் சிஎஸ்கே தங்கள் பக்கம் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது. சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவுக்காக சதமும் விளாசியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Advertisement

ஐபிஎல் தொடரில் அவ்வப்போது பந்துவீசும் ஹூடா, 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் ஆல்ரவுண்டர்களுக்கு தனி மவுசு உண்டு. ஆனால் ஹூடாவின் பந்துவீச்சு அனுபவத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்த முடியுமா என்பதற்கான விடை, பிசிசிஐ கையில்தான் உள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version