இலங்கை

அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

Published

on

அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தமது பணியிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தற்போது விடுமுறை கோரியுள்ள அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version