சினிமா

அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தெலுங்கு நடிகர்

Published

on

அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தெலுங்கு நடிகர்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Advertisement

கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.

தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதற்கிடையே, தெலுங்கானா மாநில அமைச்சரான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். 

Advertisement

அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெலுங்கானா அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

Advertisement

இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version