இலங்கை
ஆசிரியர் பற்றாக்குறை வவு.வில் ஆர்ப்பாட்டம்!
ஆசிரியர் பற்றாக்குறை வவு.வில் ஆர்ப்பாட்டம்!
வவுனியா- செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தரம் மூன்றில் கல்வி கற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பெரும் பின்னடைவை கற்றலில் எதிர்கொண்டுள்ளனர் என்றும், ஆதலால் விரைவில் இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி பெற்றோராலும் மாணவர்களாலும் பாடசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. (ச)