இலங்கை
ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
மன்னார் – ஆட்காட்டிவெளி மாவீரர்துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கான ஆயத்தப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறு இடம்பெறும் ஆயத்தப்பணிகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் செ.டினேசன் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள, நினைவேந்தல் குழுவினருடனும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.