இலங்கை

இடமாற்றம் கோரி மன்னார் மருத்துவர் கடிதம் கையளிப்பு!

Published

on

இடமாற்றம் கோரி மன்னார் மருத்துவர் கடிதம் கையளிப்பு!

மன்னாரில் மருத்துவமனை அலட்சியத்தன்மை காரணமாக இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அம்மாவட்டத்தின் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் அசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார். 

Advertisement

குறித்த கடிதத்தில், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து ஒரு குழுவினர் பிரசவ அறையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நிலைமையை சமாளிக்க பொலிஸாரை நாடிய போதும், தனிப்பட்ட முறையில் தன்னை குறிவைத்து தாக்கியதாகவும் தன்னை கொலையாளி என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சில தரப்பினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் ஆகவே தனக்கு இடமாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்து இக்கடிதத்தை எழுதியுள்ளார்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version