இலங்கை

இடிக்கப்பட்ட வவுனியாவின் பழைய பேருந்து நிலையம்!

Published

on

இடிக்கப்பட்ட வவுனியாவின் பழைய பேருந்து நிலையம்!

வவுனியா பழைய பேருந்துநிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டடங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா – கண்டிவீதியில் அமைந்துள்ள பழைய பேருந்துநிலையமே கடந்த 2017ஆம் ஆண்டுவரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாகச் செயற்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில் வவுனியா யாழ். வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலைய மூடாகவே அரச, தனியார் பேருந்துகள் சீரான முறையில் சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே பழையபேருந்து நிலையப்பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக் கட்டடங்கள் நகரசபையால் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த இடத் அரசமைப்புதில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version