இந்தியா

இமயமலை இல்லாவிட்டால் இந்தியா எப்படி இருக்கும்? – ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ!

Published

on

இமயமலை இல்லாவிட்டால் இந்தியா எப்படி இருக்கும்? – ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ!

செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ந்து வருவதால், கற்பனை செய்வதை அப்படியே அச்சுப்பிசகாமல் படைத்து வருகிறது AI தொழில்நுட்பம். எதார்த்தமான விஷயங்களை குளோனிங் செய்வதிலிருந்து மாற்று யதார்த்தங்களை உருவாக்குவது வரை இந்த தொழில்நுட்பங்கள் நம்மை மிகவும் சிந்திக்க வைக்கின்றன. படைப்பாற்றலின் சமீபத்திய எழுச்சியில், AI ஆனது இந்திய நகரங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்துள்ளது.

Advertisement

குறிப்பாக, இந்தியாவில் இமயமலை இல்லாத பட்சத்தில் பனியால் மூடப்பட்ட நகரங்கள் எப்படி இருக்கும் என்பது ஒருவரின் கற்பனை. அழகான கற்பனையுடன் உருவான இந்த வீடியோ X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. குளிர்கால சூழ்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களை வீடியோ சித்தரிக்கிறது.

ஆரம்ப கிளிப் உலக காதலர்களின் நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் பனியால் சூழப்பட்டுள்ளது. பின்னர், மும்பை கடற்கரை பகுதியை பனி சூழ்ந்துள்ள காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தெரு விளக்குகளின் கீழ் ஸ்னோஃப்ளேக்ஸ் மின்னும் குளிர்கால அதிசயமாக காணப்படுகிறது. மணல் பாலைவனமாக காட்சியளிக்கும் ராஜஸ்தானின் பாலைவனங்கள் பனிமலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

AI images of Indian cities in winters had there been no Himalayas. The Taj Mahal looks epic. pic.twitter.com/Pgal09Yqts

Advertisement

சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பனி பொழிவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரள பகுதிகள் குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கின்றன. கோவாவின் சன்னி கடற்கரைகளில் பனை மரங்கள் பனியால் நிரம்பியுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றின் மீதுள்ள ஹவுரா பாலமும் பனியால் மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 
நாக சைதன்யா – துலிபாலா திருமணம் : வெளியான முதல் புகைப்படம்

பல பயனர்கள் இந்த வீடியோவைப் பார்த்து வியப்பை வெளிப்படுத்தினர். இந்த பனி கனவு நனவாகும் வாய்ப்புகள் குறித்து சில பயனர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர். நாட்டில் பொருத்தமான காலநிலையை உறுதி செய்வதில் இமயமலை முக்கிய பங்கு வகிக்கிறது என்று மற்றவர்கள் குறிப்பிட்டனர்.

Advertisement

ஆனால், அதில் சிலர் “இமயமலை இல்லை என்றால், இந்தியாவின் வட நகரங்கள் குளிர்காலத்தில் கடுமையான குளிர் மற்றும் பனி புயல்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று வடக்கில் இருந்து நேராக வந்து நாடு முழுவதும் குளிர்ச்சியை அதிகரிக்கும்.” என்று கூறியுள்ளனர்.

இதில், ஒருவர் உடனடியாக புல்டோசரை எடுத்துச் சென்று, இமயமலையை இடித்துத் தள்ளுங்கள் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பனி மழை பெய்ய வைத்துள்ள இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version