உலகம்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி!

Published

on

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

Advertisement

மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version