சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. ஆள் அடையாளமே தெரியல!

Published

on

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. ஆள் அடையாளமே தெரியல!

அடுத்த வருட பொங்கலுக்கு விடாமுயற்சி வருமா? குட் பேட் அக்லி வருமா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் அரசியலை நோக்கி பயணித்து வரும் சூழ்நிலையில் அஜித் தற்போது தன்னுடன் கனவை நோக்கி பயணித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் எந்த படம் முதலில் வெளிவரும் என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள். விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் குட் பேட் அக்கலி படத்தை அஜித்தின் பிறந்த நாளுக்கு மே 1 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய முழு உழைப்பை ரசிகர்களாக கொடுத்து வரும் அஜித் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி வருகிறது.

கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளதாகவும் சின்ன வயது அஜித்குமாரை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒரு புதிய லுக் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் கேள்விக்குறி.

ஏற்கனவே தனது வாழ்க்கை பயணத்தில் சினிமா என்பது ஒரு பகுதி தான் அதைத் தாண்டி நிறைய அனுபவங்கள் இருப்பதாக அஜித் மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.  தற்போது வெளிவந்த AK Racing ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கலாம்.

Advertisement

 எது எப்படியோ தான் செய்யற வேலையை சிறப்பா செய்யனும் என்பதில் அஜித் உறுதியாக இருப்பது இந்த புகைப்படத்தின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.  இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version