சினிமா

எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Published

on

எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Advertisement

இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை – தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என அதிகார நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். 

Advertisement

அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version