இலங்கை

கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி!

Published

on

கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி!

நாடாளுமன்ற தேர்தல் 2024இல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்று வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர். கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில் குறித்த கட்டுபணம் செலுத்தப்பட்டது.

பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த  கட்சியின் தலைவர்; தாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு பல பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி என்றும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளம் சமூதாயத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும், அதற்கான தளத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், தமது கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version