இந்தியா

கரையைக் கடந்த புயல்… மேம்பால கார் பார்க்கிங்கை கடக்காத கார்கள்!

Published

on

கரையைக் கடந்த புயல்… மேம்பால கார் பார்க்கிங்கை கடக்காத கார்கள்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னைக்கு நேற்று (நவம்பர் 30) ரெட் அலர்ட் எச்செரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

வேளச்சேரி, ஜி.என்.செட்டி பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் நேற்று காலையிலேயே பொதுமக்கள் பலரும் தங்களது வாகனங்களை மேம்பாலத்தில் பார்க் செய்தனர். கடந்த மாதம் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்தனர்.

Advertisement

இதனையடுத்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் கார் உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய வாகன உரிமையாளர்கள், “ஃபைன் அடிச்சாலும் பரவாயில்லை. மழையில வண்டி நனைஞ்சு 50 ஆயிரம், 60 ஆயிரம் செலவு செய்றதுக்கு பதிலா, 1000 ரூபா ஃபைன் கொடுக்குறதுல்ல பிரச்சனை இல்லை” என்று ஆதங்கமாக பேட்டி கொடுத்தனர்.

எதிர்ப்புகள் அதிகமாக கிளம்பவே, வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை என்று போக்குவரத்து போலீஸ் விளக்கமளித்தது.

Advertisement

இந்தநிலையில், நேற்று ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக, வேளச்சேரி, ஜி.என்.செட்டி பாலங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பார்க் செய்தனர். இந்தசூழலில், ஃபெஞ்சால் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது.

இதனால், சென்னையில் மழை பாதிப்பு குறைந்து, இன்று இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால், வேளச்சேரி, ஜி.என்.செட்டி பாலத்தில் பார்க் செய்த வாகங்களை இன்னும் உரிமையாளர்கள் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

“இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. அதனால அசந்து தூங்கிட்டு, காரை எடுக்க மறந்துட்டாங்க” என்று ஒரு சிலர் சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Maharastra Election : ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி… சிக்கிய பாஜக பொதுச் செயலாளர்!

அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version