இலங்கை

கெஹெலியவுக்கு எதிரான குழாய் கொள்வனவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Published

on

கெஹெலியவுக்கு எதிரான குழாய் கொள்வனவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒன்பது இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான ரூபாவை செலவிட்டு ஜி.ஐ. குழாய் நாணல்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Advertisement

அதன் பின்னர், அரச தரப்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் சாட்சி விசாரணையை ஜனவரி 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version