சினிமா

கேப்டன் மகன் நடிப்பில் புதிய படம்! இளையராஜா இசையில் வெளியானது பாடல்!

Published

on

கேப்டன் மகன் நடிப்பில் புதிய படம்! இளையராஜா இசையில் வெளியானது பாடல்!

மறைத்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது சினிமாவில் என்றி கொடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர். யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களமாகும். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை இளையராஜா வரிகளில் அனன்யா பாட் பாடியுள்ளார். இந்த திரைப்படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version