இலங்கை

சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்!

Published

on

சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்!

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

Advertisement

இதேவேளை, கட்சியை மீள கட்டியெழுப்புவதற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் எனவும், தம்மால் தொடுக்கப்பட்ட வழக்கினை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஏனைய தரப்பினரால் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் மீளப் பெற்றுக்கொண்டால் கட்சியை மீளக்கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவெளை, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத தூய்மையான இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் மைத்திரி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

கட்சியில் எந்தவொரு பதவி நிலையும் தமக்கு தேவையில்லை எனவும் எதிர்காலத்தில் கட்சியின் உறுப்பினராக இருந்து கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version