இலங்கை

சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை!

Published

on

சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை!

சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில்  வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நேரடியாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்றைய தினம் (01.12.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதன் போது  வெள்ளமானது இயற்கையாக ஓடுவதற்கான வழிவகைகள் தடைப்பட்டுள்ளதனால் அதனை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினை ஆராய்ந்து வெள்ள நீரை தற்காலிகமாக தண்ணீர் பம்புகள் ஊடாக வெளியேற்றுவதற்கான  நடவடிக்கை மாவட்ட செயலரால் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில்  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன்  விரைவில் கூட்டத்தினை நடாத்தி நிரந்தர தீர்வு காணலாம் என அப் பகுதி பொது மக்களிடம் மாவட்ட செயலரால் தெரிவிக்கப்பட்டது. (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version