இலங்கை

சித்திரவதைக் கூடமா மஹர சிறைச்சாலை? 12 ஆவது நபர் மரணம்

Published

on

சித்திரவதைக் கூடமா மஹர சிறைச்சாலை? 12 ஆவது நபர் மரணம்

கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே உயிருள்ள உறவினரான தாயாரிடம் கூட வழங்கப்படவில்லை என்பதை கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. 

 இந்த மரணம் தாக்குதலால் மேற்கொள்ளப்பட்ட கொலையா? என சந்தேகிக்கும் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்புக் குழு, சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்த நபரின் சடலம் தற்போது சிறைச்சாலையில் உள்ள அவரது தாயாரிடம் அடையாளம் காண்பதற்காக காண்பிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

Advertisement

 “உயிரிழந்தவரின் வீட்டில் யாரும் இல்லை, இது தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு. அவரது சடலத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவரை அடையாளம் காணவோ. ஏனெனில் அந்த இறந்தவரின் தாய் தற்போது சிறையில் உள்ளார். ஆனால் சிறைத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த தாயை பிரேத பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்தவோ இறந்த உடலை அடையாளம் காணவோ அவர்கள் எதையும் செய்யவில்லை.”

 மஹர சிறைச்சாலையை சித்திரவதைக் கூடம் என வர்ணித்த கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா, இவ்வாறு உயிரிழந்தவர் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவரென தெரிவித்தார். மற்றைய நபரும் தற்போது காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 “சிறையில் இருவர் உள்ளனர், அவர்கள் சித்தப்பா மற்றும் மகன். சந்தேகத்தின் பேரில் அந்த இருவரும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, தற்போது அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு கைதிகளில் ஒரு கைதியின் கால் முறிந்துள்ளதாக இப்போது சிறைச்சாலை சொல்கிறது. இருவரும் தப்பிக்க முயன்றனர், தப்பிக்க முயற்சிக்கையில், அவர்களில் ஒருவர் கீழே விழுந்ததால் கால் முறிந்துள்ளது என இப்போது சிறைச்சாலை சொல்கிறது. 

Advertisement

மற்றவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாம். எனவே மற்றொருவர் வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்பட்டார். கால் உடைந்தவரும் ஹொஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் கால் முறிந்தவர் அதிக பாதிப்புக்கு உள்ளானவர் அல்ல, ஆனால் இந்த காயங்களால் பாதிக்கப்பட்ட நபர் தனது உயிரை இழந்துள்ளார்.”

கொலைகள் தொடர்பில் மஹர சிறைச்சாலையில் உள்ள முன்னுதாரணங்களை நினைவு கூர்ந்த சுதேஷ் நந்திமால் சில்வா, இது தாக்குதலால் ஏற்பட்ட மரணமா என ஊடகவியலாளர் சந்திப்பில் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

 “அப்படியானால், இதன் பின்னணியில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த கைதிகள் இருவரையும் அடித்து ஒருவரின் காலை உடைத்துவிட்டு, மற்றையவர் இங்கு அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. 

Advertisement

ஏனெனில் முன்னுதாரணங்கள் உள்ளன. மஹர சிறையில் முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே இங்கு இன்னொரு கொலை நடந்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.”

இறந்தவரின் வீட்டில் பாதுகாவலர் இல்லாதது மரண விசாரணை நடத்தாமல் இருப்பதற்குக் காரணம் இல்லை என கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

 கொடிய கொவிட் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றது.

Advertisement

 அந்த விசாரணைகளை இடைநிறுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களம் சிபாரிசு செய்திருந்தமை வெலிசர நீதவானையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version