சினிமா

சீனாவிலும் சொல்லியடிக்கும் மகாராஜா.. இரண்டே வாரங்களில் இத்தனை கோடியா?

Published

on

சீனாவிலும் சொல்லியடிக்கும் மகாராஜா.. இரண்டே வாரங்களில் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளதோடு இதில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காசியப், சச்சனா, அபிராமி, நட்டி, திவ்யா பாரதி, சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்கள்.d_i_aவிஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டும் இல்லாமல் பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இவர் விக்ரம் வேதா, மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் வில்லனாகவும் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் மைய கேரக்டராகவும் நடித்து அசத்தியிருந்தார்.இந்த நிலையில், சீனாவில் திரையிடப்பட்ட மகாராஜா திரைப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும்  நாளாந்தம் இதன் வசூல் அதிகரித்து வருவதால் இன்னும் இரண்டு வாரங்களில் 100 கோடியை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.மகாராஜா திரைப்படம் உலகத்தரம் வாய்ந்த நிலையில் இருந்ததால் இந்த படத்தை சீனாவிலும் ரிலீஸ் செய்தார்கள். கிட்டத்தட்ட 40,000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது.  இந்த படத்திற்கு தற்போது சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version