உலகம்
சீன மொழியில் பாப்பரசரின் உரை!
சீன மொழியில் பாப்பரசரின் உரை!
வத்திக்கானில் வாராந்தம் பொது கேட்போர் கூடத்தில் நடத்தப்படும் தனது பிரசங்கத்தை அடுத்த வாரத்திலிருந்து மென்டரின் மொழிப்பெயர்ப்புக்கு உட்டுபடுத்தவுள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாப்பரசர் பிரான்pஸ் இத்தாலி மொழியில் உரையாற்றி வந்தார்.
அவரது உரை ஆங்கிலம், பிரான்ஸ், ஜேர்மன், போலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் அரபு ஆகிய மொழிகளுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது.
இதற்கமைய அடுத்த வாரத்திலிருந்து இந்த உரையானது சீனாவின் உத்தியோகபூர்வ அரச மொழியான மென்டரினுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்படவுள்ளது.