சினிமா
சூர்யா குறித்து அஜித் இப்படி எல்லாம் சொன்னாரா?… பிரபலம் போட்டுடைத்த ரகசியம்
சூர்யா குறித்து அஜித் இப்படி எல்லாம் சொன்னாரா?… பிரபலம் போட்டுடைத்த ரகசியம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என அழைத்து வந்த நிலையில், அப்படி என்னை அழைக்க வேண்டாம் என கூறிவிட்டார்.தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பொதுவாக அஜித் ஒரு நடிகர் குறித்து பேசினால் அது ஒட்டுமொத்த திரையுலகிலும் ஹாட் டாப்பிக்காக மாறிவிடுகின்றது. இந்நிலையில், அஜித் நடிகர் சூர்யா குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கங்குவா மற்றும் விடாமுயற்சி என இரண்டு படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த, திலீப் சுப்புராயன் இது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அதில், “விடாமுயற்சி படத்துக்கான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது, அஜித் சார் என்னிடம் கங்குவா படம் எப்படி வந்து கொண்டு இருக்கிறது. சூர்யா எப்படி இருக்கிறார்? என்று கேட்டார்.அதற்கு நான் சூர்யா இந்த படத்திற்காக மிகவும் கடுமையாக உழைக்கின்றார். சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வைத்து நடிக்கின்றார்’ என்று கூறினேன்.அதனை கேட்டு அஜித், “அதனால் தான் அவர் சூர்யா” என்று தெரிவித்தார்” என அந்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது, இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.