இலங்கை

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நா. உ. செல்வம் அடைக்கலநாதன்

Published

on

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நா. உ. செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவுகூற  அனுமதியை வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

இவ்வாறாக மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில், இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

எனினும் இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version