இலங்கை
ஞானச்சுடர் 323 ஆவது மலர் வெளியீடு!
ஞானச்சுடர் 323 ஆவது மலர் வெளியீடு!
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் நேற்று வெள்ளிக்கிழமை 29/11/2024 வெளியிடப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை வடமராட்சியின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.தில்லைநாதன் நிகழ்த்தினார்.
மதிப்பீட்டு உரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினரும், பாடசாலை அதிபரும் சைவ புலவருமான செ.பரமேஸ்வரன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்படன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (ப)