இந்தியா

டாப் 10 நியூஸ்: கரையைக் கடந்த ‘ஃபெஞ்சல் புயல்’ முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை!

Published

on

டாப் 10 நியூஸ்: கரையைக் கடந்த ‘ஃபெஞ்சல் புயல்’ முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை!

வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சல் புயல்’ நேற்று (நவம்பர் 30) இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஃபெஞ்சல் புயல்’ காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை விமான நிலைய சேவை இன்று (டிசம்பர் 1) அதிகாலை 1 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து பங்கேற்கும் வகையில், ‘கூடுவோம் கூட்டுவோம்’ என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று தொடங்கி, டிசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, ஜிம்பாப்வேயில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

‘ஃபெஞ்சல் புயல்’ கரையைக் கடந்ததால், சென்னை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

சென்னையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தபெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வடமாலை அபிஷேக முன்பதிவு இன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version