விளையாட்டு

தெலுங்கானா DSPயாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

Published

on

தெலுங்கானா DSPயாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாநில அரசு அவருக்கு வழங்கிய பதவியை வெள்ளிக்கிழமையான இன்று டிஜிபி அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டார். 

Advertisement

இந்த நியமனம், நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காகவும், தெலுங்கானாவுக்கு பெருமை சேர்த்ததற்காகவும் சிராஜுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க கவுரவமாகும்.

இந்நிலையில் தான் ஹைத்ராபாத்தை பிறப்பிடமாக கொண்ட முகமது சிராஜ், தெலுங்கானாவை பெருமை படுத்தியதற்காக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் மட்டுமில்லாமல், இரண்டு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனுக்கும் குரூப்-1 வேலைகளை தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version