இலங்கை

தேர்தல் முடிவினை மாத்திரம் கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது – கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவிப்பு!

Published

on

தேர்தல் முடிவினை மாத்திரம் கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது – கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவிப்பு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Advertisement

இது தொடர்பில் மேலும் தெரிவித்த கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்;  சீன தூதுவருக்கு சிறிய தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன் தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை அரசியல் கைதிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள் .
இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினை ,காணாமலாக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க படவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது.அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம்.

Advertisement

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக  மேற்கொள்ளப்படுவது – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version