உலகம்

நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் சாவு

Published

on

நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் சாவு

கென்யாவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த சில நாட்களாக கென்யாவின் பல பகுதிகளிலும் போராட்டம்  நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 31 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்தமையால் அங்கு பரபரப்பான சூழல் உருவானதுடன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஞ)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version