இந்தியா
நிங்களுடைய ஸ்நேகம்… எம்.பி பிரியங்கா வயநாட்டுக்கு முதல் விசிட்!
நிங்களுடைய ஸ்நேகம்… எம்.பி பிரியங்கா வயநாட்டுக்கு முதல் விசிட்!
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நவம்பர் 29-ஆம் தேதி எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், வயநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (டிசம்பர் 1) ரோடு ஷோ நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, “வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் உழைப்பு என்பது அபரிமிதமானது.
ஒரு அரசியல்வாதியாக இருப்பதால், நாட்டின் பல பகுதிகளுக்கும் நான் சென்றிருக்கிறேன். ஆனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் மோசமானது.
இந்த நிலச்சரிவின் போது மக்களின் மனிதநேயத்தை நான் பார்த்தேன். அவர்கள் மதம், சாதி ஆகியவற்றை பார்க்கவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கிடையே காட்டிய அன்பு அலாதியானது. மிகவும் தனித்துவமானது.
மக்களை பிரித்தாளும் வகுப்புவாத அரசியல் தீவிரமாகியிருக்கும் இந்த காலகட்டத்தில், வயநாடு மக்களின் அன்பு என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்திய நாட்டை உயர்த்திய அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், சாமானிய மக்களின் கையில் இருக்கும் வளத்தை பிடுங்கி, சில தொழிலதிபர் நண்பர்களிடம் மோடி கொடுக்கிறார்.
என் மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதனை நான் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன்.
உங்களது எதிர்காலம் சிறப்பானதாக அமைய, இரவு பகலாக வேலை செய்யப்போகிறேன். உங்களுடைய அன்பை நான் அறிவேன். உங்களை இன்னும் புரிந்துகொள்ள நான் மலையாளம் படிக்க போகிறேன்” என்று தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பு… “எடப்பாடிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – ஸ்டாலின் தாக்கு!
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!