இந்தியா
நேற்று இரவு முதல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பேருந்து… 15 பயணிகள் தவிப்பு
நேற்று இரவு முதல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பேருந்து… 15 பயணிகள் தவிப்பு
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை முதல் கரையை கடக்க தொடங்கியது. புதுச்சேரி அருகில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. குறிப்பாக ஜவ்வாது மலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், வேலூரில் இருந்து ஜமுனாமரத்திற்கு நேற்று மாலை சென்ற பேருந்து ஆரூர் என்ற ஆற்றுப்பகுதியின் அருகே வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டது.
இரு ஆற்றங்கரைக்கு இடையே பேருந்து சிக்கிக் கொண்டதால் பேருந்து இருபுறம் செல்ல முடியாமல் பாதி வழியில் நின்றுள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று இரவு முதல் தற்போது வரை பேருந்தில் உள்ளனர். பயணிகளுக்கு உதவும்படி, அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.