சினிமா
பழம்பெரும் நடிகருடன் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா! SK25 அறிவிப்பா இருக்குமோ…!
பழம்பெரும் நடிகருடன் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா! SK25 அறிவிப்பா இருக்குமோ…!
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பலமடங்கு உயர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நடிப்பை அமரன் படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் SK24 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் தயாராகவுள்ள SK25 திரைப்படத்தின் மீது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.சூர்யா இந்த திரைப்படத்தில் கமிட்டாகி இருந்த நிலையில் இடையிலே விளக்கினார் தற்போது அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் கமிட்டாகியிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா இருவரும் நடிகர் ஜெய் ஷங்கரின் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.ஏதோ ஒரு விழாவில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் SK25 அறிவிப்பு எப்போது என கேட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டே SK25 அப்டேட் வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது.