விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை குறித்து வெளிவந்த மருத்துவ அறிக்கை

Published

on

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை குறித்து வெளிவந்த மருத்துவ அறிக்கை

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது.

Advertisement

இந்நிலையில் இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது.

ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version