இலங்கை
மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்!
மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்!
முன்னாயத்த ஏற்பாடுகள் தற்போது நாடளாவியரீதியில் நடைபெற்றுவருகின்ற சூழலில் மன்னார் மாவட்டத்திலும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதன்பிரகாரம் இன்று திங்கட்கிழமை(11) மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வி. சிவராஜாவின் ஏற்பாட்டில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட செயலரும் தெரிவத்தாட்சி அலுவலருமான க. கனகேஸ்வரன் தலைமையில் காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. (ச)