இலங்கை

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!

Published

on

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!

நேற்றையதினம் (04) வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகனே நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement

துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version