இலங்கை

மாவீரர் குட்டியின் நினைவிடத்தை சேதப்படுத்திய விசமிகள்!

Published

on

மாவீரர் குட்டியின் நினைவிடத்தை சேதப்படுத்திய விசமிகள்!

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் நேற்றையதினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவீரர் நாளான நேற்றையதினம் பி.ப 06.05 மணிக்கு குறித்த நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

இன்று காலை குறித்த பகுதி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவத்திற்கு ஊர்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version