விளையாட்டு

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி

Published

on

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

Advertisement

இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 143 ஓட்டங்களையும், Avishka Fernando 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Jacob Duffy 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Advertisement

மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்கள் 09 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் Will Young அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும் Tim Robinson 35 ஓட்டங்களையும் Michael Bracewell 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version