சினிமா

முதல்வர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம்

Published

on

முதல்வர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம்

பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகின ராயன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் ஜெயராம் தெரிவித்திருந்தார். 

Advertisement

சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

Advertisement

 கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்காமல் தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version