விளையாட்டு

முதல் முறையாக IPL ஏலத்தில் பதிவு செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

Published

on

முதல் முறையாக IPL ஏலத்தில் பதிவு செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது IPL கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக IPL ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

42 வயதான அவரது அடிப்படை விலை 1.25 கோடியாக நிர்ணயம். டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 IPL ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version