வணிகம்

வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு; புதிய விலை என்ன?

Published

on

வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு; புதிய விலை என்ன?

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி மாதத் தொடக்கத்தில் விலைப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.அந்த வகையில் வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாதமும் (டிசம்பர்) விலை சற்று உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னையில் இன்று முதல் (டிச.1) ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் (நவம்பர்) 1964.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1,980.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம்  வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50-ல் நீடிக்கிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version