டி.வி

வீட்டுக்குள் இருந்ததற்காக ஷிவகுமாருக்கு வழங்கப்பட்ட சம்பள தொகை எவ்வளவு தெரியுமா..?

Published

on

வீட்டுக்குள் இருந்ததற்காக ஷிவகுமாருக்கு வழங்கப்பட்ட சம்பள தொகை எவ்வளவு தெரியுமா..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து ரசிகர்களை விறுவிறுப்புடன் ஈர்த்து வருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 6 பேர் எலிமினேட் ஆகி உள்ளனர். வைல்டு கார்டு வழியாக நுழைந்தவர்களும் இப்போது விளையாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டவர் ஷிவகுமார். மக்கள் வாக்குகள் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் ஆகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வைத்த டாஸ்க்கில் மிகப்பெரிய திருப்பமாக ஷிவகுமாரை வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 28 நாட்களுக்கு முன் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த ஷிவகுமார், நிகழ்ச்சியில் தன்னை முழுமையாக நிரூபிக்க முடியாமல் கண்டெண்ட் எதுவுமில்லாமல் கேமில் எந்த மாற்றமும் கொண்டுசெய்யாமல் அமைதியாக இருந்தார்.இந்நிலையில் நிகழ்ச்சியில் ஷிவகுமாருக்கு ஒரு நாளுக்கு ₹15,000 சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 28 நாட்களுக்கு மொத்தமாக ₹4.2 லட்சம் அவர் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version