இந்தியா

187 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்ட இண்டிகோ விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published

on

187 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்ட இண்டிகோ விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.

Advertisement

இவை அனைத்தும் புரளி என்பதால் விமான நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து இன்று காலை 187 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இண்டிகோ விமானம் கொல்கத்தா புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 

Advertisement

இதை தொடர்ந்து அந்த விமானம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காலை 9 மணியளவில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

 பயணிகள் அனைவரும் இறக்கிய பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டது. விமான தொழில்நுட்ப பணியாளர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version