இந்தியா
“30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை” – விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
“30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை” – விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
விழுப்புரத்தில், பாண்டியன் நகர், அன்னை இந்திரா நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வர முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துவருகின்றனர்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்றின் கரை உடைந்ததால் சூனாம்பேடு அருகே புதுப்பட்டு கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராமத்தில் உள்ள வீடுகள் தண்ணீரில் மிதப்பது போன்ற நிலை உள்ளது. மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.1ம் தேதி) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று மழை பாதிப்பு குறித்து பார்வையிட்டார். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் மழை விடவில்லை.
முதலமைச்சரின் உத்தவின்படி, நான், அமைச்சர்கள், பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் அனைவரும் நேரடியாக வந்திருக்கிறோம். மாநகராட்சி ஆணையரும் வந்திருக்கிறார். பேருந்து நிலையம் சிறு மழைக்கே தண்ணீர் நிற்கும். தற்போது கிட்டத்தட்ட 60 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. தொடர்ந்து மோட்டார் வைத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக மோட்டார்களை கொண்டு நீரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளோம். மழை விட்டு, மூன்று நாட்களுக்கு பிறகு விவசாயிகளிடம் பேசி கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
#JUSTIN விழுப்புரம்: பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும்
-மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி#UdhayanidhiStalin #VillupuramRain #Cyclone #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/oL4dlw2BRy
பேருந்து நிலையத்தை இன்னும் சற்று உயர்த்தி கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து முதல்வரின் உத்தரவுபடி அடுத்து கடலூர் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய செல்கிறோம்” என்று தெரிவித்தார்.