இந்தியா
NCC Student ஆ ? உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு குறித்து தெரியுமா ?
NCC Student ஆ ? உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு குறித்து தெரியுமா ?
என்சிசி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள்.
இந்தியாவில் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் தேச பற்று மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் விதமாக தேசிய மாணவர் படையின் பயிற்சிவழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் உள்ளன. எனவே அதிக மாணவர்கள் என் சி சி யில் இருந்து வருகின்றனர்.அதில் 100 மாணவர்களுக்கும் மேல் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் வைத்து கொடுக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ராணுவம் காவல்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. என்சிசி-யில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மன உறுதியும், உடல் உறுதியும் ஏற்படும். வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய தைரியம் கிடைக்கும்.என்சிசி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் என்ன என்பது குறித்துஅதன் பயிற்சியாளர்கள் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில்,“நிறைய வேலை வாய்ப்புகள் சலுகைகள் உள்ளன. பள்ளியில் படிப்பவர்களுக்கு ஏ சான்றிதழுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு வருடம் பி சான்றிதழுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மூன்று வருடம் பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு சி சான்றிதழுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஏ, பி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு யூனிபார்ம் சர்வீஸில் மத்திய மாநில அரசுகள்முன்னுரிமை வழங்குகிறது. குறிப்பாக சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ராணுவம் விமானம் கப்பல் படை போன்ற வேலைவாய்ப்புகளில் எழுத்து தேர்வு எழுத தேவை இருக்காது. நேரடியாக எஸ்எஸ்பி இன்டர்வியூக்கு சென்று விடலாம்.
என்சிசியில் சி சர்டிபிகேட் வைத்திருக்கும் மாணவர்கள் யூனிபார்ம் சர்வீஸில் ஆபிஸராக எளிமையாக நுழையலாம். ima என அழைக்கப்படும் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் சி சான்றிதழ் இருக்கக்கூடியமாணவர்களில் ஒவ்வொரு வருடமும் 64 பேர் தேர்வு செய்து ஆர்மி ஆபீஸராக ஆகிறார்கள். ota ஆபீஸர் ட்ரைனிங் அகாடமியில் சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களில் 100 பேர்ஆர்மி ஆபீஸராக ஆகலாம்.naval academyயில் NCC certificate வைத்திருக்கும் ஆறு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் வேலைக்கு எடுப்பார்கள். விமானப்படையிலும் சி சான்றிதழ் உள்ளவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேரடியாக இன்டர்வியூ செல்லலாம். இது மட்டுமல்லாமல் 100 விழுக்காட்டில் 10% விழுக்காடு சலுகையும் பெறலாம். அதில் ஐந்து விழுக்காடு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆபீஸர் அல்லாமல்என்சிசி யில் சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்கள சிப்பாயாக யூனிபார்ம் சர்வீஸில் செல்லக்கூடியவர்களுக்கும் எழுத்து தேர்வு கிடையாது. நேரடியாக செல்லலாம். அப்படி செல்வர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. CRPF பாரா மிலிட்டரி போர்சிலும் எழுத்து தேர்வு அல்லாமல் சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்கள் நேரடியாக நுழையலாம்.இந்தத் துறையில் மற்ற வேலைகளுக்கும் இரண்டிலிருந்து பத்து சதவீத போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. என்சிசியிலும்சி சான்றிதழ்வைத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
முக்கியமாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. gci (girl cadet instructor) என்ற பதவி மாணவிகளுக்குவழங்கப்படும். இந்த வேலைக்கு என் சி சி யில் சி சான்றிதழ்உள்ள பெண்கள் செல்லலாம். wtlo துறையில் உள்ள பதவிக்கும் சி சான்றிதழ்வைத்திருக்கும் மாணவர்களும் டிகிரி முடித்தவர்களும் எளிதாக செல்லலாம்.மாநில அரசும் காவல் உள்ளிட்ட துறைகளில் என்சிசி சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. tnpscதுறைக்கும் சி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வுகளிலும் என்சிசி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் என்சிசி மாணவர்களுக்கு இடங்கள் கொடுக்கப்படுகிறது. அது இளநிலை முதுநிலைபடிப்புகளுக்கும் பொருந்தும். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவி தொகையும் கொடுக்கப்படுகிறது. இப்படி என்சிசி மாணவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது” என தெரிவித்தனர்.