சினிமா

OTT யில் ரிலீஸாகும் முன்பே டிவியில் ஒளிபரப்பாகும் லால் சலாம்..! எந்த சேனலில் தெரியுமா?

Published

on

OTT யில் ரிலீஸாகும் முன்பே டிவியில் ஒளிபரப்பாகும் லால் சலாம்..! எந்த சேனலில் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்பின்பு  கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வியை சந்தித்த பின் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேலாக படம் இயக்குவதை தவிர்த்து இருந்தார்.இதைத் தொடர்ந்து தனது தந்தையை வைத்து படத்தை இயக்க தயாரானார் ஐஸ்வர்யா. அதன்படி லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை கதையின் முக்கிய நாயகர்களாக வைத்து லால் சலாம் படத்தை உருவாக்கினார். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்த காரணத்தினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது.d_i_aஇவ்வாறு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து ரிலீஸ் ஆன லால் சலாம் திரைப்படம் சுமாரான திரைகளை காரணமாக படு தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் அதன் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனது தான் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா. இதனால் ஓடிடி ரிலீஷிலும் சிக்கல் ஏற்பட்டது.அதற்கு காரணம் தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் மீண்டும் கிடைத்த பிறகு அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதியாக கூறியுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகவே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளிவராமல் காணப்படுகிறது.இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்  முன்பே எதிர்வரும் டிசம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஜீ சினிமா மற்றும் ஜீ டிவியில் இந்தி வெர்சனில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் பற்றி என்னும் அறிவிப்புகள் வெளியாக வில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version