இந்தியா
OYO Hotel | கணவன் – மனைவி எனக்கூறி அறை எடுத்த ஜோடி… பின்னர் நடந்த கொடூரம்!
OYO Hotel | கணவன் – மனைவி எனக்கூறி அறை எடுத்த ஜோடி… பின்னர் நடந்த கொடூரம்!
ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள ஒரு Oyo விடுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி எனக்கூறி காலை 9 மணி அளவில் இருவர் அறை எடுத்துள்ளனர். ஆனால் மாலை 06:30 மணியளவில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை இதுகுறித்து தகவல் அறிந்துவந்து விசாரணை நடத்தியது. விசாரணையில், இறந்தவர்கள் மோஹித் அவானா (30) மற்றும் தனு (21) என்பது தெரியவந்துள்ளது. மோஹித்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பரிதாபாத் இஸ்மாயில்புரில் உள்ள சிவ் என்க்ளேவில் வசித்து வந்துள்ளனர்.
போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், மோஹித் பால் விற்பனையாளர் என்பதும், தனு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்துள்ளது. இருவரும் நண்பர்களாகவே பழகி வந்ததும், திருமணத்திற்கு பிறகு தனுவுடன் பழகி வந்தது மோஹித்தின் வீட்டில் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரும் தங்கியிருந்த அறையிலிருந்து மோஹித் மட்டும் ஒருமுறை வெளியே வந்து அந்த ஹோட்டல் ஊழியரிடம் ஒரு முகவரி மட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதெனினும் நடந்துள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருவரின் உடல்களும் பரிதாபாத் பத்ஷா கான் சிவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்த பின்னர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்லா காவல் நிலைய ஆய்வாளர் ரண்வீர் சிங் தெரிவித்தார்.