இந்தியா
PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..?
PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..?
PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..?
இந்தியாவில் வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், நிரந்தரக் கணக்கு எண் (PAN) அமைப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான PAN 2.0 ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பான்கார்டு 2.0 பற்றி ஆடிட்டர் ஜெயராஜன் கூறுகையில், “பான்கார்டு என்பது ஒரு நிரந்தரக் கணக்கு எண் என்று கூறப்படுகிறது, இது வருமான வரித்துறையினால் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதே போல் பணப் பரிவர்த்தனைக்கு பான்கார்டும் மிக முக்கியமானதாகும்.
வங்கி சேமிப்பு கணக்கிற்கும், தொழிலுக்கும் மேலும் 10 லட்சத்திற்கு மேல் வாகனம் வாங்கினாலும் அல்லது நகை வாங்குவதற்கும் பான்கார்டு முக்கிய பங்கு வகிக்கின்றது. பான்கார்டு இல்லாமல் இதனை வாங்க முடியாது. அதனால் 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பான் கார்டு என்பது மிக மிக முக்கியமானதாக விளங்குகின்றது.
தற்போது அரசாங்கம் பான் கார்டு 2.0 அறிவித்துள்ளது. இதற்கு முன்பு பான் கார்டு பதிவு செய்வதற்குத் தனியாக அதற்கென மூன்று போர்டல் இருந்தது, மேலும் பான் கார்டின் தகவல்களை வருமானவரித்துறை அவர்களது இஃபைல் போர்டலில் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதனை ஒரே போர்டலாக மாற்றுகின்றனர்.
ஆதார் அட்டை தனிநபரின் அடையாளமாக இருந்து வருகிறது, இணையம் எங்கு நாம் ஆதார் கார்டை பதிவு செய்தாலும் OTP மூலமாக இணையதளம் மூலம் வேலிடேட் செய்து கொள்கின்றது. அதேபோல் பான் கார்டையும் இணையதளம் மூலம் வேலிடேட் செய்கின்றனர்.
பழைய பான் கார்டுக்கும் புதிய பான் கார்டுக்கு என்ன வித்தியாசம் என்று பார்த்தால், ஈ-கவர்னன்ஸ் ஐந்து விஷயங்களை முன்னெடுத்து இந்த புதிய பான் கார்டு அறிமுகப்படுத்துகின்றன. முதலில் சொன்னது போல் இந்த பான் கார்டு சிங்கிள் போர்டலாக கொண்டுவரப்படுகிறது. இரண்டாவது இது முழுமையாகக் காகிதமற்ற செயலாக இருக்கப் போகின்றது அதாவது முழுமையாக இணையதளம் மூலமாக மட்டுமே பான் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், எந்த ஒரு அப்டேட்டும் இணையதளம் மூலமாகவே செய்து கொள்ளலாம். மூன்றாவதாகப் பார்க்கப்படுவது இனி பான் கார்டு பதிவு செய்யும்போது எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. புதிதாக பான் கார்டு பதிவு செய்வதற்கும் அல்லது எந்த ஒரு அப்டேட் செய்வதற்கும் மேலும், இ பான் எடுப்பதற்கும் எந்த ஒரு கட்டணமும் சேர்த்து தேவையில்லை. ஆனால் பான் கார்டு கைகளில் பெறவேண்டும் என்பதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
நான்காவது அம்சம் இதன் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு, இதில் தற்போது டிஜிட்டல் லாக் என்று அமைப்பு கொண்டு வரப்படுகின்றது. தொழில் ரீதியாகவும் அல்லது வேறு பான் சம்மந்தப்பட்ட எந்த வேலிடேஷனுக்கும் பான் கார்டு உரிமையாளரின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே எந்த ஒரு பான் கார்டு வேலிடேஷனும் நடத்தப்படும். ஐந்தாவது அம்சமாக இதுவரை பான் கார்டுக்கு என தனிப்பட்ட சேவை மையம் எதுவும் இதுவரை இருந்ததில்லை தற்போது இந்த சேவை மையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பான் 2.0 வில் இன்னொரு முக்கியமாகக் கூறப்படுவது பான்யும் டானையும் ஒரே இணைப்பாகக் கொண்டு வரப்பட இருக்கிறது. டான் என்றால் வரி மூல வசூல் அல்லது வரி கழித்தல் எண் என்று கூறப்படுகிறது. பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைகளுக்காக அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகின்றது, ஆனால் டான் எண் தொழில் செய்பவர்கள் வரி கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும், பழைய பான் கார்டு வைத்திருப்போர் புதிய பான் கார்டுக்கு பதிவு செய்ய வேண்டுமா என்றால், அவர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குப் பிற்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்றும் பழைய பான் கார்டு எண்ணை வைத்து அவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.