இந்தியா
Skin Care: மழைக்காலத்தில் சரும வறட்சியால் அவதியா… பராமரிக்க என்ன செய்யனும் தெரியுமா…
Skin Care: மழைக்காலத்தில் சரும வறட்சியால் அவதியா… பராமரிக்க என்ன செய்யனும் தெரியுமா…
Skin Care: மழைக்காலத்தில் சரும வறட்சியால் அவதியா… பராமரிக்க என்ன செய்யனும் தெரியுமா…
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரப்பதமான வானிலை நிலவுகிறது. இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை நாம் அனுபவித்திருப்போம். ஆனால் நாம் பெரிதும் கவனித்துக் கொள்ளாத, நம் உடலின் மிக முக்கிய பகுதியான தோலும் இதனால் பாதிக்கப்படுகிறது.
சருமம் வறண்டு போவது, நீரிழப்பு உள்பட பல பிரச்சினைகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. பொதுவாக ஆண்களைக் காட்டிலும் அதிக அளவில் பெண்கள் சருமப் பாதுகாப்பினைப் பராமரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
ஆனால், பருவநிலைக்கு ஏற்ப எவ்வாறான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த போதுமான விழிப்புணர்வு பெரும்பாலோனோர்க்கு இருப்பதில்லை. வழக்கமாக மழைக்காலங்களில் துணிகள் காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் அல்லது முழுமையாகக் காயாமல் இருக்கும். அத்தகைய ஆடைகளை அணிவதால் கூட நம் தோலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பருவநிலைக்கு ஏற்ப நம் சரும ஆரோக்கியத்தை நாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து Dr.R.குருமூர்த்தி MBBS DDVL கூறுகையில், “மழைக்காலங்களில் வெளியில் சென்று வந்தவுடன் ஈரத்துடன் இருக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் நமது உடம்பிற்குத் தேவையான பொழுது தண்ணீர் பருக வேண்டும்.
ஈரமான துணிகளை உடுத்துவதால் கை மற்றும் தொடை இடுக்குகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றது. துணிகளை நன்கு உலர வைத்த பின்னரே உடுத்த வேண்டும். சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகளில் காற்றின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு ஏற்ப மாஸ்ட்ரைசர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிக மொபைல் போனில் தாக்கத்தால் தூக்கமின்மையாலும் கண்களில் கருவளையங்கள் ஏற்படுகின்றது. வீடுகளில் உள்ள கடலை மாவு கோதுமை மாவு, பப்பாளி போன்றவற்றைச் சருமத்திற்குப் பயன்படுத்தும் முன் ஒரு சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து நமது சருமத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற பட்சத்தில் அதனைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.