இந்தியா

Villupuram School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… வரலாறு காணாத மழை எதிரொலி…

Published

on

Villupuram School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… வரலாறு காணாத மழை எதிரொலி…

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… வரலாறு காணாத மழை எதிரொலி…

Advertisement

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில் விழுப்புரம் அதிகனமழையை எதிர்கொண்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழையினால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும், மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டு, அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

Advertisement

மேலும், நேற்று இரவு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நேற்று காலை முதல் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் துண்டிக்க மின் விநியோகம், சுமார் 30 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்படவில்லை.

இந்த அதிகனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நாளை (டிச.02) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version