இலங்கை
ஆணின் சடலம் மீட்பு !
ஆணின் சடலம் மீட்பு !
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று நேற்று மாலை (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தின் நெற்றியில் காயம் காணப்படுவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மஹ்ரூப் நகரைச் சேர்ந்த 62 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)